
ஹமாஸ் தாக்குதல்குறித்து பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து நாட்டு தலைவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
டெல்அவிவ்: சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என இஸ்ரேல் திடுக் தகவலைத் தெரிவித்து உள்ளது.
இதனை இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டியில், இது அல்-கொய்தாவை அடிப்படையாகக் கொண்டது.
2003-ம் ஆண்டு அந்தப் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பைடன், நெதன்யாகு ஒப்புதல்!
காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களைத் தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன், தொலைபேசி வழியே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசும்போது கூறியுள்ளார்.
காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி பணிகளைப் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக நெதன்யாகுவை பைடன் தொடர்பு கொண்டு பேசினார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

