
ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த, ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமானப் பெர்த்தில் நடைபெற்றது.
இதில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 178 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதன், மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் களைமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், ஆஸ்திரேலிய முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து ஆறாவது இடத்திலும் கடைசி மூன்று இடங்களில் வங்காளதேசம். வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.


