
காலையில் கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்.
கோவையின் காவல் தெய்வமான அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.தொழில் நகரமான கோயம்புத்தூரில் ரயில் நிலையத்திற்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயில். இத பிரதான ராஜகோபுரம் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து இருக்கும்.
இருளர் இனத்தின் தலைவரான கோவன் என்பவர் கோயிலைக் கட்டினார். இக்கோயிலைக் கட்டிய கோவன் என்பவரது பெயராலேயே இவ்வூருக்கு கோவன்புதூர் என்கிற பெயர் வந்தது. பின் நாட்களில் அதுவே கோயம்புத்தூர் என்று மருவியது.அன்னைக்கு முதன்முதலாக முன்பு அமைந்த கோயில் சங்கனூர் ஓடைக்கு அருகில் தான் கட்டப்பட்டது.
சில காலத்திற்குப் பின்னர் சேரர்கள் போர் தொடுக்கும் அபாயம் இருந்த காரணத்தால், இளங்கோசர் எனும் பழங்குடியின மக்கள் புதியதொரு கோயிலைக் கட்டி கோனியம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர்.
இளங்கோசர் என்னும் அந்தப் பழங்குடியினர் ஆட்சியை இழந்த பிறகு, இக்கோயிலை நிர்வகிக்க வழியில்லாத நிலை தோன்றியது. இக்கோயிலின் முக்கியத்தை உணர்ந்து மைசூர் மன்னர் ஒருவர் இதனைப் புதுப்பித்தார்.
மகிஷாசுரமர்த்தினி அன்னையின் திருவடியில் ஸ்ரீ கோனியம்மனை அவர் பிரதிஷ்டை செய்தார்.கோவில் திறந்திருக்கும் நேரம்காலையில் 6 மணி முதல் மதியம் 12.30 வரயிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை.
