Archana Fight With Vishnu: அர்ச்சனா, விஷ்ணு விஜய் மல்லுக்கட்டும் வீடியோ!

Archana Fight With Vishnu: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் விஷ்ணு விஜய் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 59வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறுகிறது. இதில் நிக்ஸன் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார். அவர் அந்த வீட்டில் சர்வாதிகார ஆட்சி புரிகிறார். சரவண விக்ரம், ரவீனா, ஜோவிகாவை முட்டிப்போட சொல்கிறார். இதில் சரவண விக்ரம் பேசியதாக அவரை முட்டிப்போடுவதுடன் கையைத் தூக்கி நிற்கச் சொல்கிறார்”.

இப்படிப்பட்ட காட்சிகளுடன் இதுவரை நீங்கள் காணாத பொழுதுபோக்குகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற முதல் ப்ரோமோ வெளியானது. இதனைக் கண்டதும் இன்றைக்கு பஞ்சாயத்து உருவாவது நிச்சயம் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அது 2வது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

இரண்டாவது ப்ரோமோவில் பேசும் விஷ்ணு விஜய், “பொளேர் பொளேர் என வசனம் வச்சி செய்யலாமென எல்லோர் முன்னாடியும் சொல்கிறார். அப்படியான வசனம் என்னைத்தானே சொன்னீர்கள் என அர்ச்சனா சண்டைக்குச் செல்கிறார்.அப்போது, ‘உங்களை மாதிரி கேவலமான ஒரு பெர்சனாலிட்டி வச்சிகிறதுக்கு என்ன மாதிரி பார்சியாலிட்டிஸ் வச்சிருக்கலாம். இவ்வளவு வயசு ஆகுதே.

ஆள் வளர்ந்திருங்கீங்களே தவிர அறிவு வளரலையா. நான் அப்படியொரு ஆளு. பொளேர்ன்னு அடிப்பேனு சொல்றீங்க. தைரியம் இருந்தா அடிங்க பார்க்கலாம்” என மல்லுக்கட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *