
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரம் ரூபாயாக உயிர்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12 ஆயிரத்து 500 ரூபாய் இருந்து 15000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத மே மாத ஊதியம் பத்தாயிரம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம் என்று தெரிவித்தார்.



