Amit Shah Launches Tur Dal Procurement Portal: புதிய செயலி தொடக்கம்!

Advertisements

துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப் புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்.

துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பதிவு, கொள்முதல், பணம் செலுத்துவதற்காகத் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் உருவாக்கிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்.

பருப்பு வகைகளில் தற்சார்பு என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம்மூலம் முன்கூட்டியே பதிவு செய்வதன் வாயிலாகத் துவரம் பருப்பை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு உதவும் வகையில், இணையதளம் மூலம் முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார். மேலும் அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் நேரடி பணபரிமாற்றம் மூலம் சந்தை விலையில் பணம் பெற முடியும் என்று கூறினார்.

இதன் மூலம், வரும் நாட்களில், விவசாயிகளின் செழிப்பு, பருப்பு உற்பத்தியில் நாட்டின் தன்னிறைவு, ஊட்டச்சத்துப் பிரச்சாரங்கள் வலுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம், பயிர் முறையை மாற்றுவதற்கான நமது பிரச்சாரம் விரைவுபெறும் என்றும், மேலும் நில சீர்திருத்தம், நீர் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். வரும் நாட்களில் வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தொடக்கம்தான் இது என்று அவர் தெரிவித்தார்.

பருப்பு வகைகளில் தற்போது  நாடு தன்னிறைவு அடையாவிட்டாலும், பச்சை பயறு, கடலை ஆகியவற்றில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்று அமித் ஷா கூறினார். இந்தியா போன்ற விவசாய நாட்டில், நீர் கிடைப்பது அதிகரித்து வருவதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு பருவநிலை வேளாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

2027ஆம் ஆண்டுக்குள் பருப்பு வகைகளின் துறையில் இந்தியாவை ‘தற்சார்பு நிலையை அடைவதற்கு பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள்மீது பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய பொறுப்பை வைத்துள்ளார் என்று அமித் ஷா கூறினார். விவசாயிகளின் ஒத்துழைப்பால், 2027ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பருப்பு உற்பத்தித் துறையில் இந்தியா தற்சார்பாக மாறும் என்றும், நாடு ஒரு கிலோ பருப்பு வகைகளைக் கூட இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *