
அமீர்க்கு ஆதரவு தெரிவித்த சினேகன்!
சென்னை: ‘இயக்குநர் அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை, ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்’ எனப் பருத்திவீரன் பட விவகாரம் இயக்குநர் அமீர்க்கு ஆதரவு தெரிவித்து பாடலாசிரியர் சினேகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன்’ படம் வெளியாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்படம் குறித்த சர்ச்சை பூதாகரமாகியுள்ளது. இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பல திரைக்கலைஞர்கள் அமீருக்கு ஆதரவு தெரிவித்தும், ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, பொன்வண்ணன் ஆகியோர் இயக்குநர் அமீர்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் இயக்குநர் அமீர்க்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்” நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூடப் பயணித்த என்னைப் போன்றவர்களுக்குத் தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.


