Advertisements

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச வந்த காளியம்மாளை விஜய் கண்டு கொள்ளாமல் விரட்டியடித்த சம்பவம் தற்பொழுது அம்பலமாகி இருக்கிறது . சமூக ஆர்வலராக தனது வாழ்க்கையை தொடங்கி நாம் தமிழர் கட்சியில் நீண்ட காலமாக அரசியல் செய்து வந்தவர் காளியம்மாள் அந்த கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு தலைவராக பணியாற்றி வந்தார் .
தனது பேச்சாற்றல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் காளியம்மாள் . இந்த நிலையில் காளியம்மாள் தனிப்பட்ட முறையில் கோஷ்டி சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நாம் தமிழர் சீமானால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் . கடந்த எட்டு மாத காலமாக வேறு எந்த கட்சியிலும் இணையாத காளியம்மாள் ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார் .
தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் அவர் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின இந்த தகவல் நாம் தமிழர் சீமானுக்கும் தெரிந்து காளியம்மாள் தாராளமாக தமிழக வெற்றி கழத்தில் இணையலாம் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருந்தார் .
ஆனால் தற்பொழுது காளியம்மாள் தனியாக ஒரு அமைப்பு தொடங்கி அந்த அமைப்பு மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற இறுதி கட்ட முடிவை செயல் வடிவமாக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறார் .
இதற்கிடையே அவர் நடிகர் விஜயை சந்தித்து பேசிய விவகாரம் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது . நடிகர் விஜய்யை சந்தித்து பேச வேண்டும் என ஜான் ஆரோக்கியசாமி இடம் காளியம்மாள் தகவல் தெரிவித்து இருக்கிறார். அப்பொழுது , நீங்கள் கட்சியில் சேர்ந்து விடுங்கள் அதன் பிறகு விஜயை பார்த்து பேசலாம் என ஜான் ஆரோக்கியசாமி சொல்லி தெரிவித்திருக்கிறார் . இதுபோன்று பலமுறை ஜான் ஆரோக்கியசாமி தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்.
ஆனால் காளியம்மாளோ இல்லை நான் விஜய் இடம் நேரடியாகத்தான் பேச வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் இதனை தொடர்ந்து ஜான் ஆரோக்கியசாமி விஜய் இடம் தகவல் சொல்லி வர சொல்லுங்கள் என்று விஜய் அழைத்திருக்கிறார் . இந்த நிலையில்நடிகர் விஜய் இடம் காளியம்மாள் பற்றி ஜான் ஆரோக்கியசாமி தகவல் தெரிவிக்கும் பொழுது நீண்ட காலமாக சீமான் உடன் இருந்தவர் தற்பொழுது அவரை கழற்றி விட்டு வந்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார் .
காளியம்மாள் முன்னிலையில் நடிகர் விஜய் இடம் இப்படி ஜான் ஆரோக்கியசாமி பேசியிருக்கிறார் . இதன் பின்னர் நடிகர் விஜய்யும் காளியம்மாளும் சுமார் 45 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள் . முழுக்க முழுக்க காளியம்மாள் பேச்சை விஜய் கேட்டுக் கொண்டிருந்து பதில் எதுவும் சொல்லவில்லை தலையை மட்டும் ஆட்டியபடியே கவனித்து வந்திருக்கிறார் . கடைசியில் நீங்கள் எல்லா தகவல்களையும் ஜான் இடம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு விஜய் கிளம்பிவிட்டார் .
இதனை அடுத்து பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்த காளியம்மாளுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி இடம் இருந்து ஒரு தொலைபேசி வந்திருக்கிறது . அதில் அக்கா விஜய்யை சந்தித்து பேசினீங்களா என்று அவர் கேட்டு இருக்கிறார். இப்பொழுது தான் விஜய் இடம் பேசியிருக்கிறோம் அதற்குள் எப்படி தகவல் வெளியே கசிந்தது என்று காளியம்மாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறார் .
ஜான் ஆரோக்கியசாமி தான் இந்த தகவலை தெரிவித்து இருக்க வேண்டும் என்று சந்தேகம் காளியம்மாளுக்கு எழுந்துள்ளது. மேலும் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க விடாமல் ஜான் ஆரோக்கிய சாமி தான் ஏதோ திட்டம் போட்டு செயல்படுகிறார். என்றும் அவருக்கு சந்தேகம் இருக்கிறது .
இதைத் தொடர்ந்து தான் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் முடிவை கைவிட்டு தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் . இது குறித்து அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது மீனவர் நலனுக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் அந்த அமைப்பு மூலம் அரசியல் களம் காணலாம் என்று பேசியிருக்கிறார் .
எனவே வெகு விரைவிலேயே காளியம்மாள் தலைமையில் ஏதாவது ஒரு மீனவர் அமைப்பு உருவாகும் என்று தெரிகிறது. அந்த மீனவர் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் என்றும் பேசப்படுகிறது .
Advertisements



