
டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது, பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை, மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகியுள்ளனா். தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அஜித்குமாருக்கு விருது வழங்க உள்ளார். இதற்காக நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.

