AIADMK – BJP Alliance: முறிந்தது!

Advertisements

அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.

‘பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை’ என்று டி.ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். பா.ஜ.க. துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தைப் பரபரப்பாகியது.

இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியைத் தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள.இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அ.தி.மு. பா .ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பா.ஜ.கஉள்நோக்கத்தில்.அ.தி.மு.கத்தலைவர்களை விமர்சித்துவருவதாகக் கண்டன தீர்மானமும்நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து அ.தி.மு.க.அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *