Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Advertisements

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்குப் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்குப் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்குப் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கி.மீத்தொலைவில் பாகிஸ்தானை ஒட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீத்தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அங்குச் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *