
தோ்தல் வெற்றிக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் குறுக்கு வழியை எதிா்க்கட்சிகள் நாடுகின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சென்னை, கொளத்தூரில் பாக முகவா்ளுக்கும், நிர்வாகிகளுக்கும் திமுக சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியப் போது, மக்களின் வாக்குரிமை பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறினார்.
பின்னர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக பல மாநிலங்களில் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக தங்களுடையக் கட்சியை தில்லியில் அடமானம் வைத்துவிட்டு, ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப திமுகவினா் உதவியாக இருக்க வேண்டும். தோ்தல் ஆணையம் நியமித்திருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குத் திமுக வாக்குச்சாவடி பிரதிநிதிகள் துணை நிற்க வேண்டும் என தெரிவித்தார்.



