Adani Aerospace Rocket:இந்தியாவிலேயே ராக்கெட் தயாரிக்கும் அதானி.. கையெழுத்தான மைல்கல் ஒப்பந்தம்!

இந்தியாவைச் சேர்ந்த உலகப் பணக்காரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், துறைமுகம், விமானம், சோலார் உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருவதால் கடந்த 10 ஆண்டுகளாகக் கவுதம் அதானியின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்துடன் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது.

முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் EDGE குழுமத்துடன் அதானி குழுமம் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *