Actress Shreya:ட்ரெடிஷனல் லுக்கில் ஜொலிக்கும் ஸ்ரேயா..!

Advertisements

90ஸ் நாயகி ஸ்ரேயா, ட்ரெடிஷனல் லுக்கில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழிலும் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். தொடர்ந்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து நட்சித்திரமாக ஜொலித்தார்.

ரஜினி, விஜய், விக்ரம் எனத் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் படங்களைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

சினிமாவில் செம உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் கொடுத்தார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்ட இவர், தற்போது மீண்டும் செம ஆக்ட்டிவாகத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்தில் அதிக படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர், ட்ரெடிஷனல் லுக்கில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *