Advertisements

பிரபல தமிழ் சினிமா நடிகை சங்கீதா தனது கணவரும் பாடகருமான கிரிஷ்ஷை விவாகரத்து செய்கிறார் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா. முன்னதாகமலையாளத்தில் வெளியான கங்கோத்திரி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சங்கீதா அதன்பிறகு தெலுங்கு கன்னடத்தில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவரது குடும்பம் சினிமா துறையை சேர்ந்தது
இவரது தந்தை பெயர் அரவிந்த். தாயார் பானுமதி .சங்கீதாவின் பாட்டனார் கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளர் .20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார் சங்கீதாவின் தந்தையும் சில படங்களை தயாரித்திருக்கிறார் சங்கீதாவுக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் . நடிகை சங்கீதா பரதக்கலை படித்தவர் சென்னை பெசன்ட் நகர் பள்ளியில் படித்த இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார்
நடிகர் விக்ரம் சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த பிதாமகன் படம் பேசும் பொருளானது இந்த படத்தின் மூலமாக சங்கீதாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது . தொடர்ந்து சினிமா படங்களில் அதிக அளவு வெற்றி பெற முடியாத சங்கீதா விஜய் தொலைக்காட்சியில் நடுவராக இருந்தார் ஜீ தொலைக்காட்சியிலும் நடுவராக இருந்தார்
நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது பிரபல பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் திருவண்ணாமலை கோவிலில் நடைபெற்றது . இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறார்
நடிகை சங்கீதாவை விட பாடகர் கிரிஷ் வயது அதிகமானவர் . விஜய் தொலைக்காட்சியில் பாடகர் கிரிஸ்க்கு சிறந்த பாடகருக்கான விருதை நடிகை சங்கீதா வழங்கிய போது அவர்களது காதல் ஆரம்பமானது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் சங்கீதா கிரிஷ் குடும்ப மோதல் தொடங்கியுள்ளது இருவரும் அடிக்கடி சண்டை போட்ட நிலையில் தற்போது பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது
தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த நடிகை சங்கீதா தற்பொழுது இன்ஸ்டாகிராமில் தனது பெயருடன் க்ரிஷ் என்கிற கணவர் பெயரை நீக்கிவிட்டார் . பதிலுக்கு சங்கீதா நடிகை என்று மட்டும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பெல்லாம் அவர் தனது பெயரை சங்கீதா கிரீஸ் என்றே பதிவு செய்து வந்தார்
இதனிடையே சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் மகள் திருமணத்தின் போது நடிகை சங்கீதா மட்டுமே கலந்து கொண்டார் தனது மகளையும் அழைத்து வந்தார் ஆனால் கணவர் கிரீசை காணவில்லை . நிலையில் நடிகை சங்கீதாவும் பாடகர் கிரிஷும் விவாகரத்து செய்யப் போவதாக இணையதளங்களில் செய்திகள் வேகமாக பரவிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இது குறித்து நடிகை சங்கீதா தரப்பிலும் பாடகர் கிரிஷ் தரப்பிலும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements



