
பிற உயிர்களுக்காகக் கவலைப்படுபவர்கள், மனித உயிர்களுக்காகவும் கவலைப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டையொட்டிக் காவேரி நகரில் இருந்து மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.
அதன் பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரைக்கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான ரோகிணி பேசிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
முன்னதாகக் கூட்டத்தில் பேசிய ரோகிணி, பிற உயிர்களுக்காகக் கவலைப்படுவதுபோல் மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கான சட்டங்களை இயற்றினால் மட்டும் போதாது என்றும், மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.


