சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!23-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு தகவல் !

Advertisements

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வரும் 23-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது கொடைக்கானல் பகுதியில் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வரும் 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கை முழுக்க தழும்புகளுடன் போர்வாளை பிடித்தபடி ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. படத்தில் அது சூர்யாவின் லுக் ஆக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *