
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர்.
மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 64 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அஜித் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அஜித்தின் 64-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “‘ஏகே64’ படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். கேரக்டர், திரைக்கதை நன்றாக வந்துள்ளன. பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும்” என தெரிவித்தார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




