
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வருவாய்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய எம்.எல்.ஏவை கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவதூறாக பேசிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்ட அளவில் எம்.எல். ஏவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி, திருமழிசை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது, திருமழிசையில் நடந்த நிகழ்ச்சியின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஒருமையிலும், அவதூறாகவும் மிரட்டும் தோனியில் பேசினார்.
இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டித்து வருவாய்த்துறை சங்கத்தினர் சார்பில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியை கண்டித்து பூந்தமல்லி தாசில்தார் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் எம்எல்ஏவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய எம். எல். ஏ கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்ட அளவில் எம்.எல். ஏவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய பூந்தமல்லி எம்எல்ஏ வை கண்டித்து வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

