
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் என சென்னை, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதில், சென்னை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க உள்ளது.
இதையடுத்து, வருகின்ற 18 ஆம் தேதி வரை குமரிக்கடலில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வரை வீசும் எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


