
சென்னை: தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி., தேன் மொழி- போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குநர் ஆகவும்
அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக் – எஸ்.பி., ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகவும்
உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி – எஸ்.பி., ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகவும்
காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின்- எஸ்.பி., ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகவும்
திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா-எஸ்.பி., ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி வடக்கு துணை கமிஷனர் ஆகவும்
அருப்புக்கோட்டை ஏஎஸ்பி காரத் கருண் உத்தவ் ராவ்- எஸ்.பி., ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை தெற்கு துணை கமிஷனர் ஆகவும்
திருச்சி வடக்கு துணை கமிஷனர் அன்பு- சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஆகவும்,
திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் வனிதா- சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., ஆகவும்,
சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்., ரமேஷ் பாபு – சென்னை, நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆகவும்,
சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மகேஷ்வரன் – சென்னை, பாதுகாப்புப்பிரிவு துணை கமிஷனர் ஆகவும்
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ரோகித் நாதன்- கோவை போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆகவும்
மதுரை தெற்கு துணை கமிஷனர் பாலாஜி- துணை ஐஜி ஆகவும்,
நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி., அதிவீர பாண்டியன்- சென்னை போலீஸ் நிர்வாகத் துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.



