தாய்ப்பாலை குடித்து விஷப்பாலை கக்குகிறார்!

Advertisements

அ.தி.மு.க.வில் இருந்தபொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை:பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று பரபரப்பாகப் பேட்டி அளித்திருந்தார்.

இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளார். மதுரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு 2 கோடி தொண்டர்களைக் கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.இதைப் பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போலப் பேசி வருகின்றனர்.

எடப்பாடி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள்தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து பொதுக்குழு மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வைச்சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனால் தொண்டர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசி உள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்தபொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதிமன்றத்தின் மூலம் கட்சியை, தலைமை கழகத்தை மீட்டெடுத்து, இன்றைக்கு 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எடப்பாடியார் கையெழுத்து இட்டுள்ளார். நிச்சயம் 40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *