
அனிமல் பிரிண்ட் ஆடையை அணிந்து போட்டோஷூட்.
நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஜெயம், அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானவர் சதா
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்குபெற்று வந்தார்.சமீப காலங்களில் சினிமா மீது பெரிதாகக் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்.

வைல்ட் லைஃப் புகைப்பட கலைஞராக, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை நேர்த்தியாகப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அவற்றுடன் தனது புகைப்படங்களையும் பதிவிடும் நடிகை, அனிமல் பிரிண்ட் ஆடையை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.



