
நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் பொது சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடிகளுக்கு பதிலளிக்கவும், பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில் நிதிப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆண்டு பட்ஜெட்டில் 600 மில்லியன் டாலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இவ்வமைப்பின் நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். தற்போது இவ்வமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேற போவதாக அறிவித்ததால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போவது என ஜெனீவாவில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது.இந்த அமைப்புக்கு அதிகப்படியான நிதி வழங்கி வந்த அமெரிக்கா, வெளியேற போவதாக அறிவித்து விட்டது. இதனால் வரும் ஆண்டுகளில் நிதி நிலை மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 70 நாடுகளில் உள்ள அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும் இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.



