
பெண்களைக் குறித்தும், இராமாயணத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதற்கும் பொன்முடிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வந்தேமாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு தொடங்கிவிட்டதாகவும் இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வந்தேமாதரம் பாடலைக் கொண்டாடும் நிகழ்ச்சியைத் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று காங்கிரசுக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்களும் போதை ஆசாமிகளும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார்.



