Woman Doctor Murder case:உளவியல் சோதனையில் குற்றவாளி குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

Advertisements

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சஞ்சய் ராயை சிபிஐ பல கட்டங்களாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது. டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில்[CFSL] இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய் ராயை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.

சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான். சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலமும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமும் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது.

முன்னதாக சம்பவ நடந்த அன்றைய இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியில் இரண்டு இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் தனது நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினான். பின்னர் தூங்கலாம் என்று தான் ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வாக்குமூலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *