
ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தும் வரை தாம் ஓயபோவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான தங்கள் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தும் வரை தாம் ஓயபோவதில்லை என்று கூறினார்.
மேலும், உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.



