Wayanad by-election election: நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி!

Advertisements

வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisements

வயநாடு:காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, அந்தத் தொகுதி காலியாக இருந்தது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகிறார்

3 பிரதான கட்சிகளுமே வேட்பாளரை அறிவித்துவிட்டதால், அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, நாளை மறுநாள் ( புதன்கிழமை) பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியும் பிரியங்காவுடன் வயநாடு வருகை தர உள்ளனர். இதனால் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக இருவரும் பிரசாரம் செய்யலாம் எனத்தெரிகிறது. எனினும், எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *