Vivek Ramaswamy: டிரம்ப் போட்டியிட்டால் மட்டுமே நானும் போட்டி!

Advertisements

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.

சமீபத்திய கருத்துக் கணிப்பின் போது டிரம்ப் முன்னிலை வகித்தார் என்று ஊடகங்கள் தெரிவித்த நிலையில் பாராளுமன்ற முற்றுகை தொடர்பான வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், அதிபர் பதவிக்கு போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அவர் பெயரை நீக்குமாறு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்புக்கு இந்திய பிரஜையான விவேக் ராமசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற முற்றுகை தொடர்பான வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், அதிபர் பதவிக்கு போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்கியது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலை வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார். இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள விவேக் ராமசாமி, டிரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த தீர்ப்பை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இத்தீர்ப்பு, கொலராடோவில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுக் கட்சியின் முதல்நிலை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் அதன் முடிவு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2020ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சான்றிதழ் அளிக்கப்படும்போது, டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

போராட்டத்திற்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்ப் தகுதியில்லை என்று தடை விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து விவேக் ராமசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *