Vikravandi by-election:இடைத்தேர்தலில் வெற்றி பெற உழைப்பு ஒன்றே வழி – சீமான் அறிவுறுத்தல்!

Advertisements

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற உழைப்பு ஒன்றே வழி” எனத் தேர்தல் களப்பணி ஆற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்றைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவனுக்கு எனது வாழ்த்துக்கள். உயர்ந்த லட்சியத்தை கொண்டு நமக்கு அதை அடைவதற்கு உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனவே கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைப்போம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழி கடுமையான உழைப்பு தான். எல்லா வேதனைக்கும் ஒரே மருந்துச் சாதனை தான். சாதிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *