முதல் நாளே வேட்பு மனு தாக்கல் செய்யும் விஜய்.! எங்கு தெரியுமா.?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னைப் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதன்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே சென்னைப் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உடனிருந்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்தபின் விஜய் கட்சித் தொண்டர்களுடன் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரும் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *