Vijay Antony: சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க… ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க!

Advertisements

சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோவை,சேலம்,திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் விஜய் ஆண்டனி லைவ் கான்டஸ்ட் நிகழ்ச்சி குறித்தும் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படம் வருகின்ற ரம்ஜான் அன்று வெளியாவது குறித்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவையில் நிகழ்ச்சி நடத்தியதும் மேலும் தற்போது அடுத்த நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருப்பதாக தெரிவித்தார்கள். மக்களுக்காக யார் சேவை செய்கிறார்களோ உழைக்கிறார்களோ அவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சின்ன படமோ பெரிய படமோ கதை நல்லா இருந்தா படம் வெற்றி பெறும் எனவும் தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமோல் பாய்ஸ் படத்திற்கு எந்தவிதமான ட்ரெய்லர்,பிரஸ்மீட் நடத்தவில்லை மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள்.நல்ல படம் வெளியிடுவதற்கு திரையரங்கம் தேவையில்லை சமூக வலைதளங்கள் போதும் என்று கூறினார்.

பொதுமக்கள் கட்டாயமாக வாக்கு செலுத்த வேண்டும் எனவும் நமக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு செலுத்துவதை விட நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று அறிந்து வாக்கு செலுத்த வேண்டும்.ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள் ஐந்து நிமிடம் யோசித்து வாக்கு செலுத்துங்கள் எதிர்காலம் நல்லா இருக்கு என்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் வந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை தெருவாக சென்ற கூட மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று செய்தியாளர் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆயிடுமா அதே போல தான் ஆயிரம் படம் எடுத்தாலும் பிச்சைக்காரன் படத்துக்கு ஈடாகாது என்று என்று கூறினார்.பிச்சைக்காரன் திரைப்படம் அம்மாவை முழுமையாக குறித்த கதையாக இருந்தது போல் ரோமியோ படம் ஒரு கணவன் மனைவிக்கு இருக்கும் பழக்கவழக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *