Vellore SP Manivannan: வேலூர் எஸ்.பி அதிரடி பேட்டி!

Advertisements

வேலூரில் இதுவரை குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வதந்தி பரப்புவோர் மீது புகார் தெரிவிக்க அவசர உதவி எண்களை அறிமுகம் செய்த எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகக் குழந்தைகளை வட மாநிலத்தவர்கள் கடத்தி வருவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய்யான, ஆதாரமற்ற தகவல்கள் வேலூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலலேல் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வாரம் வேலூர் மாநகர் பகுதியில் வட மாநிலத்தவர் ஒருவர் குழந்தை கடத்த வந்ததாக அவர்மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் அளித்த பேட்டியில்சமீப காலமாகச் சமூக வலைதளங்களில் குழந்தைகளைக் கடத்துவதாக வரும் செய்தியால் மக்கள் நீதி அடைந்துள்ளார்கள். இதன் விளைவாக வட மாநிலத்தவர்களை தாக்குவது அவர்களைத் துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.கடந்த வாரம் கூட வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிகிச்சைக்காக வந்த வட மாநிலத்தவரை குழந்தை கடத்தவர் என நினைத்துத் தாக்கியுள்ளார்கள். இது போன்ற தகவல் அனைத்தும் பொய்யானவை, வதந்தி இதனை யாரும் பரப்பக் கூடாது.

வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தப்படுவதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி வெளியாகும் தகவல்கள் பொய்யானவை. மக்கள் அச்சப்பட வேண்டாம். பொய்யான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுடுக்கப்படும. கடந்த வாரம் வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லையில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்கப்படும்.

வதந்தி தகவல், வீடியோ மற்றும் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது காவல் துறை அவசர உதவி எண் 100 அல்லது வேலூர் மாவட்ட காவல் துறை உதவி எண்கள் 0416-2256802, 0416-2253600, 9498181231 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 8939754100 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாமென வேலூர் எஸ்.பி மணிவண்ணன் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *