
இந்தியச் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 20 ஓவர் போட்டியில் 811 புள்ளிகள் எடுத்து பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 811 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதையடுத்து, நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி 699 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்தியப் பவுலர்களில் அதிக புள்ளிகள் குவித்த வீரர் என்ற சிறப்பை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார். இதற்கு முன் ஜஸ்பிரித் பும்ரா 2017 ஆம் ஆண்டில் 783 புள்ளிகள் எடுத்ததே இந்திய பவுலரின் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது. இந்நிலையில், அவரை வருண் சக்ரவர்த்தி முறியடித்துள்ளார்.




