
பழைய பகையை ஒதுக்கி வைத்து தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எகிப்தில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடந்த காசாவின் எதிர்காலம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார்.
இதில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை சேர்ந்த நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் அதிபர் டிரம்ப் பேசியபோது, பழைய பகையையும் கசப்பான வெறுப்புகளையும் ஒதுக்கி வைத்து தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், நமது எதிர்காலம் கடந்த தலைமுறைகளின் சண்டைகளால் வழிநடத்தப்படக் கூடாது என்றும் மீண்டும் காசாவை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்கா உதவி செய்யும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இதற்கான ஆவணத்தில் அதிபர் டிரம்புடன் துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
இதை தொடர்ந்து, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் டிரம்ப், மத்திய கிழக்கில் நல்லிணக்கம் மலர்வதற்கான புதிய சகாப்தம் இது என்றும் தெரிவித்துள்ளார்.




