
கள ஆய்வு மேற்கொண்ட உதயநிதியிடம் ஒரு பெண் சண்டை போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காற்றில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி, வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி போன்றவைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் களத்தில் இறங்கி முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட முதல்வர், மற்றும் அமைச்சர்கள் தங்கள் தொகுதி மட்டுமன்றி பல பகுதிகளுக்கும் எந்ந்ரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். அப்படியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இருவரும் வேளச்சேரி பகுதிக்கு கள ஆய்வுக்காக சென்ற போது அப் பகுதியில் வசிக்கும் ஆசிரியை ஒருவர் அமைச்சர் உதயநிதியிடம் சரமாரி கேள்வி கேட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.
அப்போது அமைச்சர் மா.சுப்ரமணி சமாதானம் செய்து அமைச்சர் உதயநிதியை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றார். அந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


