
இட்லி, தோசைக்கு இனி இது மட்டும் தாங்கச் சைட் டிஷ். ஒரு முறை செஞ்சி பாருங்க.
பொதுமக்கள் அதிக அளவில் காலையிலும் மாலையிலும் விரும்பிச் சாப்பிடும் டிபன்களை இட்லி தோசை பெருமளவு பங்கு வைக்கிறது. அந்தவகையில் இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னி செய்து போரடித்துவிட்டதா? அந்த வகையில் டேஸ்ட்டாகவும், வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளவர்களை அசத்தும் வகையிலும் ஒரு ஸ்பெஷல் டிஷ் செய்து கொடுக்கலாம். அப்படி என்ன சுவையான டிஷ் என்றால் ரோட்டுக்கடை வடகறிதான்.
வடகறி செய்யத் தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு, தேங்காய் பால், சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, வரமிளகாய், வெங்காயம், தக்காளி.
செய்முறை :
ஒரு கப் கடலைப் பருப்பை முதலில் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.
அடுத்ததாக மிக்ஸியில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன் சோம்பு, 4 வர மிளகாய் கொஞ்சம் உப்பு போட்டுத் தண்ணீரை ஊற்றிக் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
அதுக்கப்புறம் அந்த மாவை சின்ன சைஸில் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கி போட்டு, வெங்காயம் நன்றாக வதக்கியபிறகு ஒரு மீடியம் சைஸ் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போகுற வரை நன்றாக வதக்கவும்.
நன்றாக வதக்கியபிறகு, ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் மசாலா பொருட்கள் போட வேண்டும்.அதன்பிறகு 1பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா,2 ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து விட்டுத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.
நன்றாகக் கொதி வந்தவுடன் கால் கப் தேங்காய் பால், பொரித்து வைத்திருந்த வடையை பிச்சுப்போட்டு மூன்று நிமிடங்களுக்குச் சூடு படுத்தவும்.
அதனை நன்கு ஊறிய பிறகு இட்லி தோசைக்கு பரிமாறினால் சுவையான வடகறி ரெடி.



