Today rasipalan:இன்றைய ராசிபலன்:09/08/2024.

Advertisements

 

மேஷம்


வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாகப் பேச வேண்டாம். உங்களைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது. புதிய வாகனம் வாங்கி விடும் யோகம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் புகழ், கவுரவம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்


வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமைக்குக் குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்


விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. சமூக ஆர்வலர்கள் உணர்ச்சிவயப்பட வேண்டாம். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள் அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்


நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் மகள் அயல்நாடு செல்வார். உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் அரசியல்வாதிகள் உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்


வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். மூளை சுறுசுறுப்படையும். மாணவர்கள் நன்கு படிப்பர். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி


இரவில் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்குப் பொறுமை அவசியம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

துலாம்


மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள்.தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்


நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். மிகவும் பொறுமை அவசியம். பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு


பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களைச் சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்


உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்


பண வரவு சீராக இருக்கும். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.விவசாயத்தில் மனம் நாடும். அதற்குண்டான விசயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். காதல் கைகூடும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

மீனம்


பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணம் வெற்றிதரும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து சேர்ந்து விடுவர். அலுவலகத்தில் வீண் அரட்டையை தவிருங்கள். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் கரும் : பச்சை

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *