Today rasipalan:இன்றைய ராசிபலன் – 18.10.2024

Advertisements

Today rasipalan:இன்றைய ராசிபலன் – 18.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-

தமிழ்: குரோதி வருடம், ஐப்பசி மாதம் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை

ஆங்கிலம்: அக்டோபர் 18-ம் தேதி 2024

நட்சத்திரம்: இன்று மாலை 04.01 வரை அஸ்வினி பின்பு பரணி

திதி: இன்று பிற்பகல் 03-16 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 – 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45

ராகு காலம் காலை: 10.30 – 12.00

எமகண்டம் மாலை: 3.00 – 4.30

குளிகை காலை: 7.30 – 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 2. 00 – 03.00

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 – 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

ராசிபலன்:-

மேஷம்


அரசு வேலைகள் சாதகமாகும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் தங்களுக்கெதிராகச் செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். மாணவர்களின் தங்களின் தேவைகளைப் பெற்றோர்கள் பூர்த்தி செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்


தம்பதிகளிடையே அன்பு பலப்படும். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். உடல் நலம் சிறப்படையும். பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மிதுனம்


வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு இன்சன்டிவ் கிடைக்கும். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்


தாய்வீட்டு உறவினர்கள் வருகை உண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். அதிகப் பயணங்களால் லாபம் கூடும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் சுய தொழில்களில் முதலீட்டினை மேற்கொள்வர். மாணவர்கள் பகுதி நேர தொழில்நுட்பப் பயிற்சியில் சேருவர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்


இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்தப் பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கன்னி


உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை ஏற்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.திருமணமாகாதவர்களுக்கு ஏற்றத் துணை கிடைக்கும்.வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்


வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு


பெண்களுக்குத் தாங்கள் எதிர்பார்த்த வரண் அமையும். தேகம் பளிச்சிடும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்


அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், வியாபாரிகள் புதிய கிளைகளைத் துவங்குவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். நினைத்த இடத்திற்குபார்க்க வேண்டிய நபர்களைச் சந்தித்து நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்


வங்கிப் பணியாளர்கள் மேன்மை அடைவர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். காதலர்கள் தங்களின் பொறுப்புகளைச் சரிவரச் செய்வர். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் மேம்படும். குடும்பத் தலைவி சேமிக்கத் துவங்குவர். எதிர்பார்த்த வேலை தாமதமின்றி விரைவில் முடியும். கடன் கட்டுக்குள் அடங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்


உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர். பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மிகும். நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர். பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *