
TNSTC | Yellow colour | Bus | Public | Travel
புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன.அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்குப் பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. எனவே இனி தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிறப் பேருந்துகளை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாகப் பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்குப் பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது


