
அப்பாவி மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பாச்சி படப் புகழ் பெஞ்சமின் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பெஞ்சமின், தெருநாய்கள் விவகாரத்தில் எவ்வளவு புகார் அளித்தும் நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக கூறினார்.
அப்பாவி மக்களை கடிக்கும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பாச்சி திரைப்படப் புகழ் பெஞ்சமின் வலியுறுத்தினார். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரைப்பட நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,தெருவில் நடந்து செல்லும் அப்பாவி மக்களை கடிக்கும் தெரு நாய்களை மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
எத்தனையோ புகார்கள் கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை இல்லாதது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.வெறிபிடித்த தெரு நாய்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் நாய் கடியில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் பெஞ்சமின் கருத்து தெரிவித்தார்.


