
திருவண்ணாமலையில் நடைபெறுகிற தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடியில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த, நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
இதையடுத்து, நிகழ்ச்சியில் 2 இலட்சம் பேர் பங்கேற்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த, நிகழ்ச்சியைக் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கழகத்தின் தலைமை தொண்டனான முறையில் அனைவரையும் வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


