
அறம் – பொருள் – இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம் என்றும் அறம் – பொருள் – இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.



