
இந்தியாவிற்கும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கும் இடையே மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவிற்குத், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இந்த, தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்று, தொடரில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இருபது ஓவர் போட்டி இமாசலபிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில், இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.



