
கோலிவுட் உலகில் புகழின் உச்சியில் இருந்த பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன். சென்னையில் பிறந்த இவருக்கு இப்பொது வயது 27.
“காதலிக்க நேரமில்லை”, மற்றும் “அதே கண்கள்” போன்ற பல காலங்களைக் கடந்தும் போற்றப்படும் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன்.
மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் பிறந்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “பலே வெள்ளையத்தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகக் களமிறங்கினார்.
அதன் பிறகு தொடர்ச்சியாகத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான “நெஞ்சுக்கு நீதி”, “மாயோன்” மற்றும் “அகிலன்” போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது “ரசவாதி” என்கின்ற திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன், “பேப்பர் ராக்கெட்” என்கின்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

