
எப்போதும் மக்கள் நெரிசலாகக் காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகமான முறையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் மாடிஎதிரில் சுமார் 26 வயதுடைய பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதாகச் சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்தப் பெண் கருப்பு கலர் துனியால் இரும்பு ஸ்டேன்டில் தூக்கில் தொங்கியவாறுஅமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதையடுத்து ரயில்வே போலீசார் பெண்ணின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் இறந்து கிடந்த இடத்தில் தடயங்களைப் போலீசார் சேகரித்தனர்.
பெண் இறந்து கிடந்த அருகில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அதனையும் போலீசார் கைப்பற்றினர். பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? கொலையா? எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஏப்போதும் மக்கள் கூட்டமாகக் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்படி? அந்தப் பெண் முதல் மாடிக்குச் சென்றார்? பாதுகாப்பு நின்ற போலீசார் கண்டுகொள்ளவில்லையா? சந்தேகத்தின் பேரில் பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

