Stock Market Today: கொஞ்சம் பெருமூச்சு விடுங்க! ஏற்றம் கண்ட பங்குச்சந்தை!

Advertisements

Stock Market Today:இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

நேற்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 2500 புள்ளிகள் சரிவடைந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

காலை 10:33 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 637.10 அல்லது 0.66% புள்ளிகள் உயர்ந்து 79,285.41 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 200.85 அல்லது 0.72% புள்ளிகள் உயர்ந்து 24,222.55 ஆக வர்த்தகமாகி வருகிறது.

மூன்றாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி:

நேற்றைய வர்த்தக நேரத்தில், 2,500 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வர்த்தகமான பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்தது. அமெரிக்க பொருளாதார நிலை ஏற்படும் அச்சம், அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைய காரணங்களாகச் சொல்லப்பட்டது.

லாப – நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பிரிட்டானியா, டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, ஹெச்.சி.எல். டெக்., கிரேசியம், டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், எல்.டி.மைண்ட்ட்ரி, லார்சன், மாருது சூசுகி, ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., சிப்ளா, டாடா ஸ்டீல், டாகடர், ரெட்டீஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி., கோல் இந்தியா, எம்& எம், பஜாஜ் ஆட்டோ, டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், சன் ஃபார்மா, பவர்கிரிட் கார்ப் ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., பஜாஜ் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.

எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி.எஃப். சி. லைஃப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி, நெஸ்லே, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

பங்குச்சந்தையில் எழுச்சி முதலீட்டாளர்களைச் சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 649.76 ஆகவும் நிஃப்டி 0.82% 24,252.10 ஆகவும் இருந்தது. 2351 பங்குகளில் ஏற்றத்திலும் 965 பங்குகள் சரிவுடனும் 84 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *