Southern Railway: 12 ரயில்கள் ரத்து!

Advertisements

வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவையானது சீரமைப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் இன்றும் 12 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக – ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி கடந்த 14-ஆம் தேதி முதற்கொண்டு இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்ததால்  ரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *