
ஆவடி அடுத்த அம்பத்தூரில் மாதனான்குப்பம் பகுதியில் அமைந்துள்ளசோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழாவில் 666 மாணவியர்கள் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றனர்.
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் மாதுனகுப்பம்பகுதியில் அமைந்துள்ள சோக இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை விருந்தினராக டோக்கியோ சோகா பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர், சோகா கக்காய் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் திரு. யோஷிகி தனிகாவா அவர்கள் கலந்து கொண்டு
பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.
பின்புசோகா கக்காய் பன்னாட்டு நிறுவனத்தின இயக்குநர் டாக்டர் ஆகாஷ் கே. அவுச்சி அவர்கள் மாணவியர் நினைவலை நூலை வெளியிட்டார்.பின்பு கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பயின்று முடித்த609 மாணவியர் இளங்கலைப் பட்டத்தையும் 54 மாணவியர் முதுகலைப்பட்டத்தையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை 3 மாணவியருமாக மொத்தம் 666 மாணவியர் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றனர்.
பின்பு கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கும் பலதரப்பட்ட ஊழியர்களுக்கும் மொத்தம் 4 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கங்களும் வெள்ளி பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் சேது குமணன் கல்லூரி முனைவர் மீரா முருகேசன் மற்றும் கல்லூரி ஆசிரியர்களும் கல்லூரி மாணவிகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.


