
சினிமாவில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அரசியல் பற்றி சிந்திக்கப்போவதாக நடிகர் சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் திரையரங்கில் கொம்பு சீவி படத்தினை விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினருடன் கண்டு ரசித்தார். இதனை தொடர்ந்து, நடிகர் சண்முக பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொம்பு சீவி படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறினார். படத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நாங்களே கஞ்சா பயன்படுத்த மாட்டோம் என்பதை காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சண்முகபாண்டியன், சினிமாவில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அரசியல் பற்றி சிந்திக்கப்போவதாகவும் அடுத்த கட்டமாக ஐந்து படங்களுக்கு கையெழுத்திட்டுள்ளதாக நடிகர் சண்முகபாண்டியன் கூறினார்.




